காதல் கிறுக்கி

அரை நிமிட யோசனையிலும்
ஆயிரம் முறை நினைக்கும் ,
என் மனது ...

எங்கே நடந்து செல்கிறது ...
பின் தொடர்கிறது என் கால்கள் ...

கண்ட காட்சிகளை
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பும்
என் விழிகள் ...

பேச நினைத்த வார்த்தைகளை
கேட்க துடிக்கும் செவிகள் ...

புரியாத வரிகளை
கவிதைகளாய் கிறுக்கும்படி
செய்யும் என் விரல்கள் ...

இவையெல்லாம் விளங்காமல்
முழிக்கும் நீ .....

எழுதியவர் : சாருமதி (11-Mar-15, 12:03 pm)
சேர்த்தது : சாருமதி
Tanglish : kaadhal kirukki
பார்வை : 208

மேலே