தாய்மை

தாய்மையின் மகத்துவம்
தரணியில் தனித்துவம்!
இனமென்ன..
மொழியென்ன..
நாடென்ன...
எதுவாயினும்
தாய்மை
தன்னலமற்றது!
வாழும் காலம்வரை
வாழும் பிள்ளைக்காகவே!
வீழும் போதும்
பிள்ளைக்காகவே!
இறக்கும் முன்னும்
இறக்கையில் காக்கும்
இரக்கம் உடைய தாய்மைக்கு
தரத்தில் நிகரேது

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (11-Mar-15, 3:47 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : thaimai
பார்வை : 184

மேலே