முதியோர் இல்லத்தில்
முதியோர் இல்லத்தில்
நானிருந்தாலும்
மனம் மட்டும் மகனிடமே!
உன் ஒவ்வொரு தேவையும்
உணர்ந்தே அறிந்து உடன்செய்தேன்!
உன் உணர்விலும்
உன் தாயை ஏற்க
உனக்கு நினைவில்லையா...?
ஒவ்வொரு நாளும்
ஓடிவரும் மகன்களின் நடுவில்
என் மகனும் வருவானா..
என ஏங்கியே
என் கண்கள் பனிக்கின்றன!
பேரக்குழந்தைகள்
பேச்சைக் கேட்கவே
பேராசையில்
பேச்சின்றி
பார்க்கின்றேன் வாசலை
வழிமேல் விழிவைத்து
இன்றாவது வருவாயா..?