தாய்மடி சொர்க்கம்
பச்சை படர்ந்த புல்வெளிகள்
நடுவே அமைந்த மண்குடிசை
அருகே இரண்டு மரமிருக்க
மரத்தின்கீழே தாயுடன் நான்
உழைத்த களைப்பில் உணவருந்தி
தலைசாய்த்த இடத்தில் தாயின்மடி
தாயின் கரங்கள் தலைவருட..
கண்னுறங்க நேர்ந்த நேரம்..
காவேரி கந்துவட்டியெலாம் மறந்து..
டாஸ்மாக் பணமெல்லாம் வீடுநிறைத்து..
வானம் மும்மாரி பொழிந்திருக்க..
நானும் அதனால் மகிழ்ந்திருக்க..
விளைந்த பொருளுக்கு விலைசொல்லும்
வியாபாரி யாகவும் நானிருக்க..
கண்டகனவை பொறுக்காத காற்று..
மண்வாரி இறைத்தநொடி
கலைந்தது...
சொர்க்கம் சென்ற என்கனவு..