படுக்கறை பூக்கள் - உதயா

வணக்கம்

செல்வபுரம் எனும் ஊரில் ராணி என்பவள் பிறந்தால். அவள் அனாதையாக மட்டும் பிறக்கவில்லை சில கொள்கைகளோடும் பிறந்தால். தான் பெண்ணாக இருந்தாலும் பெரும் வீரத்தோடு பிறந்தவள். அது பள்ளிக் கூடம் இல்லாத ஒரு கிராமம். மானத்தினை உயிராக மதிக்கும் கண்ணகி அவள் . ஒரு வேலை உணவாயினும் பகிர்த்து உண்ணும் பரந்த மனமுடையவள். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் உழைப்பாளி அவள்.

ராணி தனது உழைப்பை ஐந்து வயது முதலே தொடர்ந்தவள் .தனது உழைப்பாலே தானே ஒரு வீட்டினைக் கட்டிக் கொண்டாள். இப்படி தான் வாழவேண்டுமென பல கனவுகளைக் கட்டிக் கொண்டாள்.ஒருநாள் அவள் சாலையில் நடக்கையில் ஐந்து வயதினை உடைய நான்கு சிறுவர்கள் பிச்சையுடனே தங்கள் படிப்புக்கு உதவுமாறு கண்ணீர் முகத்தோடு பிச்சைகேட்டு அமர்ந்திருந்தனர் .

சாலையை கடப்பவர்கள் ஆயிரம் நண்பர்கள் இருந்தும் எவருக்கும் அக்குழந்தைகளின் குமுறல்கள் கேட்கவில்லை . ராணி அவர்களுக்கு இருவது ரூபாய் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். வழக்கம் போல் தனது வேலைகளை முடித்துவிட்டு உறங்க சென்றுவிட்டாள். அவள் உறங்கும் போது எப்போதுமே இதமான பாடல்களை கேட்டுக் கொண்டுதான் உறங்குவாள் .

ஆனால் அன்றிரவு இதமான பாடல்களுக்கு இடையில் ஏதோ ஒரு கனமாக குரலும் கேட்டது .ஆம் அவளுக்கு கேட்ட குரல் "தங்கள் படிப்புக்கு உதவுங்கள்" என் சொன்ன அந்த நான்கு குழந்தையின் குரல்தான் அது .மறுநாள் விடியல் நேரத்திலே ராணி எழுந்து அந்த குழந்தைகளை காண சென்றாள்.காரணம் அவள் சிறுவயதில் படிக்க நினைத்து பலரிடம் கேட்டும் எவரும் உதவாததே .

நான்கு சிறுவர்களையும் தம்பிகளாக நினைத்து அழைத்துவந்து படிக்கவைத்தாள். அந்த நான்கு சிறுவர்களை போன்றே அவள் கண்ணில் பட்ட அனைத்து அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து படிக்க வைக்க நினைத்தால் .

ராணி தத்தெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐம்பதில் நின்றது . அதில் ஆண் பிள்ளைகள் முப்பத்திரண்டு பெண் பிள்ளைகள் பதினெட்டு .இனி யாரும் பிச்சை எடுக்க கூடாதுயென கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.அவள் தத்தெடுத்த ஐம்பது குழந்தைகளையும் படிக்கவைத்தாள்.

அவள் ஒருவளின் உழைப்பிலே அனைவரும் உண்ணவேண்டும்,துணிமணிகள் உடுத்தவேண்டும்.ஏதோ ஒரு வேகத்தில் எடுத்த முடிவு ஒரு நேரத்தில் தவறாக போய்விட்டதோ என அவள் மனம் நினைக்க தொடங்கியது. காரணம் அவள் உழைத்து பெரும் வருமானம் போதவில்லை .தான் சேர்த்துவைத்த பணத்தினை வைத்து கொஞ்சம் காலம் நகர்த்திவிட்டாள்.

இனி என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை.தத்தெடுத்த குழந்தைகளை மறுபடியும் அனாதையாக்க விரும்பவில்லை.சரி வசதி படைத்தவர்களிடம் உதவி கேக்கலாமென நினைத்து புறப்பட்டாள். தனது நிலைமையை எடுத்து சொல்லி ஒரு கடையில் உதவி கேட்டாள்.அந்த கடைக்காரன் அவள் சொன்னதை பொறுமையாக கேட்டுவிட்டு கடைசியில் நான் உதவி செய்கிறேன். தான் செய்யும் உதவிக்கு நீ என்ன கைம்மாறு செய்யபோகிறாய் என கையை பிடித்தான். ராணி கோபமுற்று அவன் கண்ணத்தில் தன் கை ரேகையை பதித்தாள்

உதவி நாடும் திசையெங்கும் காம நாய்களின் நடமாட்டங்கள்தான் கவலையுடன் வீடு திரும்பினாள்.குழந்தைகள் பசிக்குது அக்காயென சொன்ன வார்த்தையில் ராணியின் கனவுகளும் கொள்கைகளும் கண்ணாடியாய் உடைந்துபோனது. வேறு வழியே இல்லாமல் காம நாய்களுக்கு விருந்தாக மாற நினைத்தாள்.

தத்தெடுத்த பிள்ளைகளை பொறுத்த வரையில் அக்கா எப்போதும் போல வேலைக்கு தான் போகிறாள்.ஆனால் அவளுக்கு மட்டுமே தெரியும் தினம் தினம் நரகத்தை கண்டுவருவது. அந்தி பொழுதில் வனத்தில் மலரும் மலர்களை போன்றே இச்சை மனிதரின் கூட்டத்தின் நடுவில் நடுவில் மலர்ந்து நிற்பாள் .மாலையில் வனத்தில் பூக்கும் மலருக்கும் மறுநாள் மதியம் வரை வாடாத வாழ்வு நிச்சயம். ஆனால் இச்சை கூட்டத்தினுல் மலர்ந்த அவளுக்கோ அடுத்த நொடியே வாடிய மலரின் வாழ்வு சத்தியம்.

அவள் உடலின் தேகத்தில் நகங்களின் தடங்கல் ஏராளம். வெண்மை பூவாய் மலர்ந்து சிவப்பு பூவாய் கசக்கி எறியப்படுவதே நாள்தோறும் அவளுக்கு வாழ்வானது.சூரியனின் பார்வை தேகமெல்லாம் பரவும் போதும் அவளுள் எழும் வலிகளுக்கு அளவே இல்லை . இருந்தும் அனைத்தும் மறந்து போகும் அந்த பிள்ளைகளை பார்க்கும் போது

அனாதையாய் இருந்த அனைவரையும் படிப்பில் சிறக்க வைத்து உயர்ந்த மனிதர்களாய் உயர்த்தினாள்..
கண்ணகியாய் வாழும் கனவு களைந்து போனாலும்.பதினெட்டு பெண்களை கண்ணகியாய் வாழ வைத்ததை நினைத்து கொண்டு மகிழ்ந்தாள்.

அவள் வளர்த்த ஐம்பது செல்வங்களுக்கு வேதமாய் சில மந்திரங்கள கற்றுக் கொடுத்தாள்.என் நிலையிலும் தன்மானத்தை இழந்து வாழாதீர். உங்களால் முடிந்த வரை உங்களை போல அனாதையாய் இருப்பவர்களை உறவாக்கி கொண்டு வாழுங்கள்

அவள் மனதின் வலிகளுக்கு தான் படிக்கவைத்த பிள்ளைகள் தனக்கு சொல்லி தந்த படிப்பில் எழுத்து வடிவில் மருந்தாக தொடங்கியது. தன் வாழ்வையே எழுத தொடங்கினாள். பிள்ளைகள் அனைவரும் வேலைக்காக வேறு வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர் . மாதம் ஒருமுறை ராணியை வந்து அனைவரும் பார்ப்பார்கள் . வாரம் தோறும் அவள் அனைவருக்கும் கடிதம் எழுதுவாள்.

ஒருவாரம் அவளது கடிதம் யாருக்குமே கிடைக்கவில்லை . அனைவரும் அவளை பார்க்க வந்தார்கள். ராணி தன் உழைப்புக்கு ஒய்வு தேட மேலோகம் சென்றிருந்தாள்.அவள் எழுதிய டைரியின் இறுதி பக்கத்தில் " நான்கு நபர்களின் நன்மைக்காக மானத்தோடு கல்லறை பூக்களாய் வாழ்வதை விட , படுக்கறை பூக்களாய் வாழ்வதில் தவறேதுமில்லை. ஆனால் அந்த நான்கு நபர்களையும் படுக்கரைக்கு அழைத்துவிடாதே"....

என்நாள் படுக்கறை பூக்களின் கண்ணீருக்கு காரணம் அறியபடுகிறதோ அன்றுதான் படுக்கரை பூக்களும் இனி பிறவா பிறவியெடுக்கும்.........

எழுதியவர் : udayakumar (17-Mar-15, 4:27 pm)
பார்வை : 237

மேலே