தந்தையார்

வானம் ஏறமுற்படுதற்கில்லை !
என்றாலும் ஒருவன் எனை,
அலேக்காக உயரம்தூக்கி உந்தச்சொன்னான் !
பூமி அளந்துவிட முடிகிற விசயமில்லை !
அசகாயன் ஒருவன் எனை,
முயன்றுபார் முடியாததில்லை என்றான் !
அரியதாய் ஒரு பாதை !
எவரும் அடியொற்றி நடக்காதது !
அதில் போகலாமா என்றேன் !
சரியோ தவறோ நினைத்ததை செய் !
தயக்கம் தவறான விசயமென்றான் !
அதோ அந்த பொருளின்மேல் அவா என்றேன் !
தயங்காமல் தருவித்த மனிதன் !
அதற்காக வியர்வையில் நனைந்திருந்தான் !
எள்ளி நகையாடினர் என் தவறு பார்த்து பலர் !
அதற்கெல்லாம் அஞ்சாதே !
தவறுகள் உன்னை புடம்போடும் தங்கமே !
எழுந்து நட நீ என் வித்து என்றான் !
அம்பாரி ஏற ஆசைப்பட்டு அழுதேன் !
அங்கேயே மண்டியிட்டவன் ஆசுவாசித்து !
மேலே அமரவைத்து வீடெல்லாம் சுற்றி,
இதோ எங்கள் இளவரசன் என்றெனை !
எல்லோர்க்கும் அறிமுகம் செய்துவைத்தான் !
பொறுமை பெருமை சிறுமை வெறுமை !
என்று எந்த பாத்திரம் ஏற்க முனைந்தாலும் !
ஆங்கே தண்ணீராய் நிறைந்து வாழ்வு செய்தான் !
வாழும் வழி இது,
வாழ்க்கையின் முறை இது,
வழிவழியாய் வருவதிது,
வளம் தொடரும் பந்தமிது,
என ஒவ்வொன்றாய் சுட்டி புகுத்தவில்லை அவன் !
வேறென்ன செய்தானெங்கில் !
அளப்பறியா உணர்வுகளையும் !
அலையாய் பொங்கும் உணர்ச்சிகளையும் !
சிறகடித்த சிந்தைகளையும் !
செவி நிறைக்கும் வாக்குகளையும் !
திறம்பட உணர்த்தாமல் !
வெறுமனே வாழ்ந்துகாட்டினான் அவன் !
தெய்வம் சாமி கடவுளெல்லாம் உள்ளனர்தாம் !
அதில் மாற்றுக்கருத்து அறவே கிடையாது !
என்றாலும் எங்கள் தந்தையர் !
முக்காலமும் எக்காலமும் உணர்ந்து உணர்வித்து !
எமக்கென வாழ்ந்து மறையும் பெரும் இறைவன்கள் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (18-Mar-15, 9:42 pm)
பார்வை : 60

மேலே