நாற்பது மெட்டுக்களுக்கு பின்

வெற்று இடைவெளியும்
கடவுச்சொல்லாகும் காலமிது.

குறைக்கடத்திகள் தான்
மின்னூட்டவியலின் ஆதாராமே.

எதிர்மறை ஓட்டம் தான்
தொட்டவுடன் தூக்கும் மின்சாரமே.

பாக்டீரியாக்கள் நீந்தியபின் தான்
பால் மாறும் தயிரென அறிவோம்.

நாற்பது மெட்டுக்கள் விலக்க பின்
அந்திமழை பொழிந்தது இராஜாவிற்கு.

சருகென வீழ்வதெல்லாம் நாளை
நிலக்கரி தான் தேடியே எடுப்பார்.

நான் வீண் என புலம்புவதை விட்டு
முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (21-Mar-15, 12:31 am)
பார்வை : 95

மேலே