காதல் மனம்

ஆண்: நான் உன்னைப் பிரிந்து சென்றால்...
பெண்: உயிர் பிரிந்து செல்வேனடா!

ஆண்: நான் உன்னை மறப்பது போல நடித்தால்...
பெண்: மீண்டும் உன்னை புதிதாய் காதல் செய்வேனடா!

ஆண்: உயிர் சிலிர்க்க
நான் உன்னைத் தீண்டினால்...
பெண்: புதிதாய் பிறந்த மலர் போல
பூத்துக் குலுங்குவேனடா!

ஆண்: அன்பே!
உன்னை நான் மறக்க முடியுமா?
பெண்: மறந்தால் காதல் தான்
உன்னை சும்மா விடுமா?

ஆண்: பூவின் வாசம் நீ!
பெண்: எந்தன் சுவாசம் நீ!

ஆண்: காதலிக்கத் தெரியாதடி!
பெண்: இது காதலுக்கும் தெரியாதடா!

ஆண்: நான் உனக்குள் தொலைந்து போனதால்...
பெண்: உன் உயிராய் வாழப் பிடிக்குதே!

ஆண்: துன்பங்கள் வருகின்ற வேளைகளில்...
பெண்: அன்னை மடி போல
சுகம் தருதே! உன் நேசம்.

ஆண்: காதலே!
உனக்காக சுவாசிக்கிறேன்.
பெண்: காதலே! உன்னையே
உயிராக சுவாசிக்கிறேன்.

-வே. பூபதிராஜ்

எழுதியவர் : வே. பூபதிராஜ் (21-Mar-15, 6:38 am)
சேர்த்தது : பூபதிராஜ்
Tanglish : kaadhal manam
பார்வை : 135

மேலே