குடி பழக்கம்
குடிப் பழக்கம்
குடித்தனத்தை - மெல்ல மெல்லக்
கொல்லும் - பின் உன்னையும்
கொல்லும்.
குடியை ஒழிப்போம் என்று
குடித்துக் கொண்டே இருந்தால்
குடியை ஒழிக்க முடியாது.
குடியை ஒழிக்க
குடி இருக்கும் கடையை நாடி
குடி இருக்காதே.- உன் இல்லறக்
குடியும் இருக்காதே.
எரியும் தீயை அணைக்க - மண்
எண்ணையையா ஊற்றி அணைக்க முடியும்?
குடியை ஒழிக்க - உன் குடும்பக்
குடியை மறந்தா குடியை ஒழிக்க முடியும்?
குடிப்பவன் தான்
குடி ஒழிய வேண்டும் என்பான்.
இல்லையேல் - உன்னை
குடிக்க வைத்து - அதில் தன்
குடியை மட்டும் வாழ வைக்க
குடி ஒழிக்க உன்னை - ஊன்று
கோலாக தன் குடியை வாழவைப்பான்.
உன் வீட்டில் எரியும் விளக்கை
ஊதி அணைக்க ஒருக் கூட்டத்தையே
உன்னோடு அனுப்பி வைப்பான்.
உன்னையும் அதில் அனைத்து விடுவான்.
நீ அணைந்து விட்டால் - உன் வீட்டு
நிம்மதி விளக்கு எரியுமா என்ன?- உன்னை
நண்பனாகவும், தொண்டனாகவும்
நயந்துப் பேசியவன் - மரணத்தில்
நீ உறங்கி விட்டால்
கண்ணீர் விட்டுக் கரைந்துப் போவான்.
குடியை ஒழிக்க - தூண்டுபவன் தான்
குடியை ஒழிக்க போராடவேண்டும்.
ஆனால் - மேடை ஏறி குரல் கொடுத்து
மேதாவியாக தன்னைக் காட்டிக் கொண்டு
மெத்தனமாய் அவன் வாழ
வழி வகுத்துக் கொள்வான்.
அவனை நம்பி உன்
அன்பானக் குடியை மறந்து
அழிந்துப் போகாதே. - உன்னையே
அழிக்கும் குடியை நாடிப் போகதே.
அவன் உன் முதுகின் மேல் ஏறி
அவனியை வலம் வருகின்றான்.
உன்னைப் போல் உள்ளவர்களின்
உறுதுணையால்
உல்லாச வாழ்வின் - சுய
விலாசத்தில் அவன்
வசதியாய் வாழ்கின்றான்.