என் அம்மா -sagi

அம்மா.....

இன்றும் அவளுக்கு
நான் குழந்தையே.....

உண்ணாமல் உறங்கும்
இரவு நேரங்களில் உணவு
ஊட்டி விட்டு உறங்க வைப்பவள் ...

சற்றே முகம் வாடினாலும்
கொஞ்சி சிரிக்க வைத்து மகிழ்பவள் ....

குமரி என்று உறவுகள்
கூறினாலும் குழந்தையாகவே
என்னை எண்ணுபவள்....

நான் படித்து பட்டம்
பெற்றேன் அவளால் ....

அவள் பட்ட துயரங்கள்
கொஞ்சமல்ல நான்
உயர்நிலைக்கு வர ....

இன்றும் தந்தைக்கு தந்தையாக
தாய்க்கு தாயாக ,
நல்ல தோழிக்கு தோழியாக
பழகும் என் அன்பு தாயவள்....

எவ்வுறவுமே நம்மை
உண்மையாக உணர
போவதில்லை நிச்சயம் ...

என்னை முழுமையாக
உணர்ந்து உண்மை அன்பை
சிறிதும் குறைவின்றி தரும் தெய்வமவள் ...

மரணம் வரை மட்டுமல்ல ....

இனியொரு பிறவி இருப்பின்
என் அன்னையாக அவளே வேண்டும்....

மகனாக பிறந்து ஆயுள் முழுவதும்
அவளை நான் சுமக்க வேண்டும்....
ஆயுள் முழுவதுமே ....

எழுதியவர் : sagi (21-Mar-15, 1:19 pm)
பார்வை : 238

மேலே