அம்மா அம்மா -மூர்த்தி
பசிகண்டு பசியாற்ற..
மகிழ்ச்சிகண்டு இளைப்பார..
வலிகண்டு குணமாக்க..
அன்புகண்டு ஆனந்தம்பெற..
அனைத்துக் கவிஞரும்
முதற்கொண்ட முதற்கவிதை
"அம்மா அம்மா "
கருவிலே பிறந்து..
கருசுமந்து..
உருவாய்நின்ற திருகண்டு
மகனாய்ப் பிறந்த மணிமகுடம்
வாய்நிறையக் கொண்ட முதற்கவிதை
"அம்மா அம்மா"
-மூர்த்தி