தாயின் குரல்
![](https://eluthu.com/images/loading.gif)
-தாயின் அழுகுரல்-
வாய்தாக்கள் வாங்குமவன்
வழித்தேடி வருவானென
தீராத வழக்கைப்போல்
தினம்தோறும் நிற்கின்றாள்
முதியோரின் இல்லத்தில்
மடிந்துபோகும் நேரத்திலும்
முகம்சுழித்துப் போவானோ
முகவரியை மறைத்துவிட்டு
அத்தனையும் அவனுக்காய்
அள்ளித்தந்த அன்னையவள்
ஆசைகளைத் திறக்கின்றாள்
ஆயுளது போதுமென்று..!