உழுவாரும் எழுவாரும்

உழுவாரும்... எழுவாரும்...

மரம் வெட்டி மழை விரட்டி
நிலம் வறட்சி கண்டது
பச்சை வயல் வாழ்ந்த இடம்
பலவடுக்கு வீடுமானது...!!

ஆறு ஏரி காணவில்லை
ஆரைக் கேட்பது??
அடுக்குமாடி வீடுகளோ
வயலையுண்ட பேய்களானது...!!

மழை தொடா பூமியிங்கு
மலடும் ஆனது
ஏருழவன் வாழும் வாழ்வில்
மண்ணும் விழுந்தது...!!

விளைந்த பயனின் பெரும்பகுதி
இடைத் தரகை சேருது
ஏரோட்டிய உழவர் கண்ணில்
நீரோட்டம் பாயுது...!!

உழுபவரும் எழுந்திடத்தான்
வழிவகை ஏது?? - அவர்
உழைத்த உழைப்பு வணிகரைத்தான்
உயர்த்தி வைக்குது...!!

நேரடிக் கொள்முதலே
என்றும் நியாயமானது - இதற்கு
சட்டமொன்று வந்ததென்றால்
உழவர் வாழ்வில் தரித்திரமேது..??

உழுதவனோ உழைப்பவனோ
அவன் பயனுற வேண்டும்
வழி பறிப்போர் உழவர் வாழ
வழி விட வேண்டும்..!!

விழுந்த உழவர் வாழ்வினிலே
உயர்ந்தெழ வேண்டும்...
உணவு தரும் உழவனையே
நாம் தொழ வேண்டும்...!!

எழுதியவர் : சொ.சாந்தி (21-Mar-15, 5:55 pm)
பார்வை : 634

மேலே