தாய்மை வலிமையின் வலி

தாய்மை!! (வலிமையின் வலி!!!)

கட்டியவனின் அன்பு நீர்-
கருத்தோன்றல் ஆகி-பின்
பிள்ளையாய் வெளி வந்து
உருத்தோன்றல் ஆகும்-
அப்பத்து மாதமும்
அசாதாரணமானது-
ஆண்களுக்கு-சற்றே
அசாத்தியமானது!!
ஆம் - அவளுடம்பின்
நற்குருதி யாவும்
நாசக்குருதியாகி
வெட்கமின்றி வெளியேறிட-தோல்கள்
வெளிறிப்போனதில்
மயக்கமென்றும்-
மந்த நிலையென்றும்-
வாந்தியென்றும்-பித்த
வாதமென்றும்-நாக்கில்
ருசியின்மை கொண்டதால்-
பசியின்மையும் கொண்டது போக-
பேராபத்தாய் தாக்கும்
பார்வைச்சுருக்கமும் (pre-eclampsia)
பாதக்கட்டுமென (Deep.Vein.Thrombosis) -
யாவும் தாங்கி-பத்து மாதம்
அசராது தாண்டி-
இனிதாய் பிறப்பதற்கு
பிறப்புறுப்பை பிரித்தும்-
இன்னலேதும் ஆகிவிட்டால்
இளம் வயிறு கிழித்துமென
இவள் படும் பாடுகளை இயம்பிட-
இப்பக்கம் போதாதென்பதால்- நான்
இத்தோடு நிறுத்துகிறேன்!!!!!!

எழுதியவர் : அரவிந்த்.p (22-Mar-15, 1:01 am)
பார்வை : 68

மேலே