மலர்களே
மலர்களே !!
தேனீக்களும் வண்டுகளும்
உங்களை துவம்சம் செய்ததாலா ?
அழகிழந்து நிறமிழந்து
துவண்டு
உடன் மடிந்துவிடுகிறீர்கள்!
பூக்களே நீங்கள்
வண்டுகளிடம் உங்கள் கற்பை இழந்தாலும்
பிறந்த பயனுக்காய்
எங்களுக்காய் அறுசுவைக் கனிகளை
தந்துவிட்டுத்தான் செல்கிறீர்கள்
நிம்மதியாய் விடைபெறுங்கள்
உங்களுக்காய் இவ்வுலகம்
உங்ளைச் சூடி மாலை இட்டு
பூஜைக்காய் தூவி
வாழ்த்தி கௌரவிக்கும்!