நான் அறிவிழந்த பறவை

என் சிறகால் நீண்டு சென்று நின்றதொரு கருவேலஞ் செடி,

அதில் முள்ளின் கணுக்களன்றி திண்ண நற்கனி ஏதுமில்லே...

அருகில் படர்ந்து நெடிந்திருந்த கொடி ஒன்றில் செம்பழங்கள் பலவாறு நில்ல,

அதனுல் ஓடி குனிந்தேன்...
அதுவோ நாவைக் கசப்பால் கொல்லும் பாகற்கொடி.....

நெஞ்சில் ஆசையின் நரம்பு அறுந்தது.

கண்ணில் நீரோ நெடுநெடு வென வீழ்ந்தது...

நாவு வறண்டுத் தூற்ற தயாராய் நின்றது...

உள்ளம் கசந்து,
தொய்வு கொண்டு
தீயில் விழவே திண்ணம் வந்தது,

வானக்கனல் கண்டு,
உயிர் கொல்லும் நெருப்பென நினைந்து
தொலைவு சென்றேன்...

அக்கொடுந் தனலும் என் அவாவிற்கு இணங்க மறுத்தது.....

எழுதியவர் : சிவசங்கர்.சி (22-Mar-15, 8:55 am)
பார்வை : 104

மேலே