எனக்கு கிடைத்த ஈர நோட்டு
கொல்லி மலை உச்சியில மேகங்கள் கருகருக்க மேற்கத்திய மழை சலசலக்க
சட்டேன்று சாய்ங்கால வேளையில் பெய்ய தொடங்கிய சாரல் மழை ......
களத்து மேடுள்ள கிடக்குற கதிர் நெல்லோ அரைகுறையா நனஞ்சு கிடக்க கல்லூரி
கிலம்புன என்னை காண வந்த என் தந்தையின் தவிப்பு இன்னும் என் சிந்தை விட்டு பிரியல. .
மேல் சட்டை பையை உள்ளங்கையில் பிடிச்சுகிட்டு ஓடி வந்த என் அப்பா அடுத்த வார்த்தை
பேசாம சட்டைபையில் இருந்த சலவை நோட்ட எடுத்து என் உள்ளங்கையில் வைத்த
உள்ளத்துக்கு ஊன் உள்ள வரை உண்மையா இருக்கனும் தோனுச்சு ..
கல்லூரிக்கு வந்து காலையில காகிதம் வாங்க சலவை நோட்ட சட்டுனு எடுக்க
இருக்கி பிடிச்ச கொண்டு வந்த நோட்டு நடுவுல ஈரமா இருந்துச்சு ...
மழையல நனஞ்சுருகுமோனு மதிக்க தெரிஞ்ச என் மதிக்கு தெரியல படிஞ்சிருபது மழை
நீர் இல்ல கவலையோடு என் உள்ளங்கையில் நோட்ட தினிக்கும் போது
என் கடவுள் கண்ணுல இருந்து விழுந்த கண்ணீருங்கறது .........