எழுத மறுத்த வார்த்தைகள்

எங்கங்கோ அலைகின்ற பறவைகள்
மீண்டும் தேட நினைப்பது அதன் பிறப்பிடமே

பேச தெரியாத மரங்களின் இறப்பின் மூலம் தான்
வசிக்க ஆசை படுகின்றனர் மனிதர்கள்

இலவசமாக கிடைக்கப்படும் எதுவும்
புனிதமாக கருத படுவதில்லை மனிதர்களால்
அது இயற்கையாக இருந்தாலும் சரி
தன்னை பெற்றவர்களாக இருந்தாலும் சரி

எந்த ஒரு மிருகமும்
தனக்கான தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள
மற்றவைகளை அடிமை படுத்த நினைப்பதில்லை
மனிதர்களை தவிர

தன் முயற்சியால் முன்னேறினேன் என்று சொல்ல படுபவர்களும்
தன் திறமையால் முன்னேறினேன் என்று சொல்ல படுபவர்களும்
முன்னேற முடியுமா
மனிதர்கள் வழாத வேற்றுகிரகத்தில்

நாம் சுவாசிக்கிறோம் என்று சொன்னால்
அதில் எத்தனை முன்னோர்களின் உழைப்பினாலும்
அவர்கள் பேணிகாத்து வந்த இயற்கையாலும் தவிர
நாம் பிறக்கும் போதே எதுவும்,
காசு கொடுத்து வாங்கி வரவும் மில்லை
மூட்டை கட்டி துக்கி கொண்டும் வரவும் மில்லை

தனக்கான சந்ததிகள் நல்லாயிருக்க
இருக்கின்ற சந்ததிகளை அழிக்கிறோம்
இயற்கை தந்ததையும் அழிக்கிறோம்

மனிதர்கள் வாழ்கின்ற இடத்தில் மட்டும் தான்
உயர்த்த வீடு
தாழ்ந்த வீடு
ஏழை
பணக்காரன்
பிச்சைக்காரன்
ஆனாதிகள்
எல்லாம்
வாழ்கின்ற விலங்குகளுக்கும் கிடையாது
பறக்கின்ற பறவை களுக்கும் கிடையாது

மனிதனின் இறப்பு அது மனிதனுக்கு வேதனைக்குரியது
விலங்குகளின் இறப்பு அது மனிதுக்கு வேடிக்கைக்குரியது
இதுதான் இப்போதைய மனிதர்களின் உலகம்...

எழுதியவர் : காந்தி (22-Mar-15, 9:59 am)
பார்வை : 305

மேலே