முதன் முதலாய் அப்பாக்கு
எத்தன கவித நா படிச்ச
அத்தனையிலு அம்மாபத்தி எழுதியிருந்தாங்க
ஒத்தவரி ஒன்னு ரெண்டு பேருதா
சொல்லியிருந்தாங்க
ஒரு தலை பிரம்மன் நீ தானே
என்னை உலகத்துக்கு தந்தவன் நீ தானே
அன்புள்ள தகப்பா
அம்மாக்கு வலி கொடுத்தாலும்
என்ன தூக்கி கொஞ்சி இருப்ப
என்ன பத்தி என்ன என்ன நெனச்சி இருப்ப
மரம் ஏறி வீடு திரும்பயில
மகன் பைய பாப்பானு
ஏதேனு வாங்கி வருவயே
கோபம் வருகையில கோடாரி எடுத்து
விறகு பிளப்பது போல என் முதுவ
பிளக்கையில எனக்கு கோபம் வரும்
அடுத்த நிமிடம் வலி தாங்க மாட்டணு
வண்டில கூட்டிக்கிட்டு வடக்க போய்
வரலான்னு வாழதண்டா எடுத்து
தோளில் சுமப்ப
எண்ணெய் தெய்ச்சு சொடுக்கு நீ
எடுக்கையில உடம்பு எல்லாம்
சூடு பறக்கும் அடுத்த தெருவிற்கு
அணல் அடிக்கும்
எட்டு வயசுல தகப்பா
ஊரே கூட உன்ன
தென்பெண்னையில தகணம் பண்ணல
தியாகம் பண்ண
நீ இருந்து இருந்தா என்ன என்ன செஞ்சு இருப்ப
எரிமலையில் நீச்சல் அடிச்சு இருப்ப
எவரஸ்ட்ல இருந்து தல கீழா குதிச்சு இருப்ப
ஒத்த நிமிஷம் யோசிச்சி இருந்தா
என் மொத்த வருஷம்
பாத்து இருக்கலாமே