தென்னை

தென்னையே
நீ வீசும் தென்றலின் போதையில்
மயங்கிப் போனதால் என்னவோ
உன்னிடம் மது இருப்பதை
மனிதன் தெரிந்து கொண்டான்
ஆனாலும் நீ சரியான
கோபக்காரிதான்
பாலையை வெட்டிய பாவத்திற்க்கு
பாடையை கட்டிவிட்டாயே.

எழுதியவர் : (22-Mar-15, 6:33 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : thennai
பார்வை : 100

மேலே