குறள் காலை

பரிதியெழ தென்றல் எழுசுரம் சேர்க்க
மலர்பாடும் புன்னகைரா கம்

இறைதொழா கையும் இயற்கைபோற் றாகவியும்
என்செய நீயேசொல் வாய்

ஆத்திகம் நாத்திகம் பேசுவானால் நாட்டினில்
நல்ல வனாக இரு

மதப்பூசல் இட்டு மனிதாநீ மண்ணிலே
மானுடம் கொல்வதே னோ

பிறமதம் தூற்றுதல் நல்லற மன்றறி
அன்பு உலக மதம்
கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-15, 9:31 am)
பார்வை : 141

மேலே