ஜீவராசிகளின் கோரிக்கை

எங்கள் மூங்கில் காடுகளை
அழித்து அபகரித்து
வயல் வெளியாக்கிய
மனிதர்கள் எங்களை
பட்டாசு போட்டு விரட்டி
அராஜகம் செய்கிறார்கள்
கருணை புரிவாய் கடவுளே
முறையிட்டன யானைகள்.

எங்கள் வயல்களை
நாசம் செய்யும் யானைகளிடமிருந்து
எங்களை காப்பாற்று
முறையிட்டான் மனிதன்

சிலையாகி போனான் இறைவன்.

எழுதியவர் : (23-Mar-15, 5:27 pm)
பார்வை : 79

மேலே