இவன் இம்மண்ணுகுச் சொந்தம்
ஈழத்திற்கு கொஞ்சம் கூட
ஈரம் இல்லை போலும்
எங்கள் மீது .....
எத்துணை பேர் குருதியை
போரில் கொட்டிக் கொடுத்தாலும்
ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது
எங்களை மட்டும் ..........
எங்கள் பாதச் சுவடுகள்
பட்ட இடத்தை எல்லாம்
பதுங்கு குழிகளாய்
மாற்றி விட்டது .........
எங்கள் கனவுகளை
எல்லாம் அதில் புதைத்து விட்டு
கண்ணீரிலும் கடலிலும்
தத்தளித்து கரை சேர்ந்தோம் .....
இனியாவது சுதந்திரக்காற்றை
சுவாசிக்கலாம் என்று .....
இங்கேயும் விடவில்லை ............
ஈழத்திற்கு கொஞ்சம் கூட
இரக்கம் இல்லை போலும்
எங்கள் மீது .....
அதன் பெயரைச் சொல்லியே
எங்கள் சுவாசத்தை
அகதிப்பைக்குள் அடைத்து விட்டனர் .............
எது எப்படி இருந்தாலும் .........
இறுதியாக ..........
இவன்
இவன் இம்மண்ணுகுச் சொந்தம்...............
அன்று கலந்து விடும்
எங்கள் சுவாசம்
உங்கள் அனைவரோடும்............
****************************************************