கலிகால வாழ்கை - உதயா
யாராரோ எதையெதையோ
தேடி தேடி பலவழிகளில்
ஓடுகிறார்கள்
பல வழிகளில் தொடரும் பயணம்
பணமெனும் ஒரு புள்ளியில்
முடிந்தும் தொடர்கிறது
தனக்கென
வகுக்கப்பட்ட பாதையில்
எவரும் பயணிப்பதில்லை
பிச்சைகாரணாய் பயணம் தொடர்ந்தவன்
கொலைகாரனாய் கொடிக்கட்டி
பறக்கிறான்
தர்மத்தின் தலைவனாய் பதவியேற்றவன்
கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாய்
வாழ்கிறான்
தன் குட்டிகளை
தானே தின்னும்
நாயைப் போல
ஈன்றெடுத்த மகளையே
விபச்சாரத் தொழிலுக்கு
அழைக்கிறாள் பெண்ணொருத்தி
காகிதத்தில் அச்சிடப்பட்ட
எண்கள் மீது கொண்ட
தாகத்தால்
எண்ணிலடங்க உறவுகளின்
உயிரினை குடிக்க
துடிக்கிறான்
தன் நாட்டி அழிவிற்கு
தானே தலைவனாக
துணிகிறான்
மோகத்தால் தொடர்ந்த ஏகத்தில்
தனக்கு தடையான யாவரையும்
தீக்கு இறையாக்குறான்
நான் பிணமெனும் பிறப்பினை அடையும்போது
காய்ந்த விறகுகள் மட்டுமே நம்மை
அரவனைக்குமென நினைக்க மறுக்கிறான்
பிறக்கும் போதும் தனியாக பிறக்கிறான்
வாழும் போதும் தனியாக வாழ்கிறான்
சாகும் போதும் தனியாகவே சாகுகிறான்
இறந்தபின் சொர்க்கம் தேடி அலைகிறான்
வாழும்போது சொந்தங்களாய் தேடிவரும்
சொர்க்கத்தை மறுக்கிறான்
இதுதான்
ஆறாம் அறிவின்
அற்புத திறனோ
மனிதனாய்,
பணம் திண்ணும் பேயாய்
பல காலம் வாழ்வதை விட
அதோ
அந்த பறவையின் கூட்டத்தில்
ஒருநாள் பறவையாக
இணைந்தே சேர்ந்தே
வாழ்ந்தே மரணிக்க
சிலர் நினைக்கிறார்கள்
எவரும் தனது வாழ்வை
உணர்ந்து வாழ்வதில்லை
இதுதான் வாழ்க்கையா .........?