இது விழி ஆகாரம் - சந்தோஷ்

பாவையவளின் பார்வையழகை
பாவலன் அவன் கண்டநொடியில்
பாந்தளின் நெடுந்தலை வழுவி
நெஞ்சுக்குழியில் உருண்டோடியதாய்
ஒரு மாயையில் வீழ்ந்தானாம்


-----------------------------


நீயென்ன அங்கதன் மகளோ?
உன் விழியென்ன வயிரத்தண்டோ?
சடுதியில் விடும் உன் விழிநோக்கில்
ஆயிரம் காதல் தீப்பொறிப் பறக்கிறதே..?
-----------------------------



பாவையின் விழிகளிலிருந்து பறந்த
இருமுனை சூலப் பார்வை
அவன் மார்பில்தைத்த ரணந்தானோ
அசூரக் காதல் காயமோ ?

-----------------------------

என் வாலிப வயிற்றில்
பலத்த ரசனை பசி..!
அன்பே.. !
கொஞ்சம் பரிமாறுவாயா
உன் விழிகளால்
நிறைய காதல் ஆகாரங்களை.!

--------------------------


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (25-Mar-15, 9:56 pm)
பார்வை : 179

மேலே