சுதந்திரம்?

எனக்கு உதவிய இருபத்தைந்து பேர்களில்...
என்று பில் கேட்ஸ் விவரிக்கும் புத்தகத்தில்
முதல் இருபத்திமூன்றும் நம்மூர்
ரங்கராஜன்களும் ஸ்ரீனிவாசன்களும் தான்.

இரு கரம் நீட்டி ஆங்கிலேயர்களும்
அமெரிக்கர்களும் அழைத்தது, அழைப்பது
நம்மை இறுக்கி அணைப்பதற்காக அல்ல
அணைத்து இறுக்குவதற்காக...

கருத்து சுதந்திரம் கறுத்துப் போன
அன்னமாய் இங்கே!
பூஜ்ஜியம் கண்டுபிடித்தது காலம் சென்ற இந்தியன்
பூஜ்ஜியமும் ஒன்றும் என்று கணினி தயாரித்தவன்
உலகமயமாக்கல் கோட்பாடோடு
உலவிவரும் அமெரிக்கன்!

சிலர் கருப்பு மை சேர்த்து சிவப்பாய் எழுதுவார்கள்;
சினம்கொண்ட சிங்கம் ஒன்று சிவப்பு மை கொண்டு
கருப்பை எழுதியது...கருப்பாய் எழுதியது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்றெழுதியது!

எழுதியவர் : Agniputhran (29-Apr-11, 1:36 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 561

மேலே