எமதூதனின் கொல்கலைகழகம்

அன்று வந்த தபால்களை ஒவொன்றாக பிரித்து கொண்டிருந்தார் ஏட்டு ஏகாம்பரம்.
ஒரு கடிதம் மட்டும் வித்தியாசமாக இருந்தது.

தினசரிகளில் உள்ள எழுத்துக்களை வெட்டி ஒட்டி ஒட்டி வார்த்தைகளை வரவைத்து இருந்தது.
கண்ணாடி போட்டு கொண்டு அதை படித்தார் ஏகாம்பரம்.

"வருகிற 17 தேதி கோடம்பாக்கத்தில் இருக்கும் வரதராஜன் என்பவரை கொலை செய்ய போகிறேன். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்." என்று இருந்தது அந்த வாசகம்.

படித்தவருக்கு தூக்கி வாரி போட்டது. "எந்த கிறுக்கன்னு தெரியலை. யாராவது இப்படி ஒரு கடிதம் எழுதி போலிசுக்கு கொடுத்துட்டு கொலை செய்வாங்களா" என்று யோசித்தவாறு அதை எடுத்துக்கொண்டு போய் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க. அவர் அதை படித்து பார்த்து சிரித்துகொண்டே

"ஏட்டைய்யா. இந்த கடிதத்துக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுகாதிங்க... எந்த கிறுக்கனோ தேவை இல்லாம இது மாதிரி செய்வானுங்க... விட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க.." என்று சொல்லிவிட்டு புறப்பட்டு செல்ல, கடிதத்தை எடுத்து மேசை அறைக்குள் போட்டுவிட்டு அடுத்த வேலை பார்க்க போனார் ஏட்டு ஏகாம்பரம்.

17ஆம் தேதி. கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.

கதவை திறந்தவர் வெளியே நின்ற ஆளை பார்த்ததும். வாங்க.... வாங்க... என்று உள்ளே அழைத்து செல்ல, வந்தவர் சிர்த்து கொண்டே உள்ளே போனார்.

உள்ளிருந்த சீட்டில் அவர் உக்கார்ந்து கொள்ள,

"அய்யா எப்படி இருக்கார்" என்று கேட்க.

வந்தவர். "ரொம்ப நல்லா இருக்கார்... உங்களை எல்லாம் ரொம்ப கேட்டார்.. அய்யாவோட பர்த் டே வருது இல்ல...... அதனால உங்களை அவசியம் வரணும்னு சொல்லிட்டு வர சொன்னார்." என்று கூற.

"கண்டிப்பா வரேன்னு சொல்லுங்க..." என்று சொன்னவர். "கொஞ்சம் இருங்க. காபி போட்டுட்டு வரேன்னு உள்ளே சென்றார்.

வெளியே வரும்போது 2 கப் காபி எடுத்து கொண்டு வந்து டேபிள்மேல் வைக்க.

"குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேணுமே" என்று வந்தவர் கேட்க.

"இதோ எடுத்து வரேன் என்று உள்ளே போனதும். தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து உள்ளே போனவர் கப்பில் போட்டு கலந்து வைத்துவிட்டு. அமைதியாய் இருக்க.

வந்தவர் கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு, காபி குடிக்க. அவரோடு, சேர்ந்து இவரும் குடிக்க. வந்தவர் சீக்கிரம் குடித்து முடித்துவிட்டு உள்ளே சென்று கோப்பையை கழுவி வைத்துவிட்டு . "அப்ப நான் வரேங்க..." என்று சொல்லிவிட்டு கிளம்பிய 5 நிமிடத்தில் உள்ளே இருந்தவருக்கு மயக்கம் வர. அப்படியே சாய்ந்து படுக்க. படுத்து 10 நிமிடத்தில் மரணம்.

மறுநாள் அவரை கூப்பிட வந்த நண்பன் வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை தள்ள திறந்து கொண்டது.

உள்ளே. வாயில் ரத்தம் வந்து மரணம் அடைந்து இருந்த நண்பனை பார்த்து போலிசுக்கு போன் செய்ய. உடனடியாக போலிஸ் அங்கு வந்து சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய. விஷம் குடித்து மரணம் என்று ரிப்போர்ட் கொடுத்தார்கள்.

உடன் இருந்த நண்பனோ, "தன் நண்பனுக்கு வேலை கிடைக்காத விரக்தி இருந்தது என்றும்... ஏற்கனவே இது மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தான் என்றும், கடைசியாக இப்படி தற்கொலை செய்து கொண்டான் என்று சொல்ல, போலிசும் அதை தற்கொலை என்று கூறி கேசை முடித்து கொள்ள, விஷயம் அதோடு அடங்கியது.

2 நாள் கழித்து. அதே மாதிரி மீண்டும் ஒரு கடிதம் அதே ஸ்டேஷனுக்கு வந்தது.

ஏட்டு ஏகாம்பரம் இப்போது மிகவும் பரபரப்புக்கு உள்ளானார்.

அதில் இருந்த வாசகம் இதுதான்

"நான் சொல்லியும் நீங்கள் சட்டை செய்யவில்லை. அநியாயமாக ஒரு சாவுக்கு காரணம் ஆகி விட்டீர்கள். நான் சொன்னது போலவே கொலை செய்துவிட்டேன். வேண்டுமானால் அந்த ஸ்டேஷனில் விசாரித்து கொள்ளுங்கள். நான் மீண்டும் மீண்டும் கொல்வேன். அதையும் உங்களிடம் சொல்லிவிட்டுதான் செய்வேன். முடிந்தால் என்னை பிடித்து கொள்ளுங்கள்." இப்படிக்கு எமதூதன். என்று இருக்க.

"சார்" என்று கத்தினார் ஏகாம்பரம். (தொடரும்)

எழுதியவர் : sujatha (27-Mar-15, 4:42 pm)
பார்வை : 774

மேலே