தீண்டாமை

மாலை பள்ளி முடிந்ததும் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு ரமேஷ்ம்,மாரியப்பனும் கை கோர்த்தபடி நடந்துவந்து கொண்டிருந்தனர் அப்போது ஒரு குரல் டே ரமேஷ் இங்க வாடா என்று அதட்டியபடி ஒலித்தது, அது ரமேஷ்ன் அப்பா மளிகைக்கடைக்காரர் " ஏன்டா உனக்கு எத்தன தடவ சொல்றது அந்த கீழ்சாதிப்பையனோட சேராதேன்னு,உனக்கு பழகறதுக்கு நம்ம சாதிப்பசங்களே இல்லையா?
இனி அந்த பையனோட சேர்ந்து வந்தினா கால ஒடச்சுப்போடுவம்பாத்துக்க"
என்று கத்தினார் அதற்கு ரமேஷ் ஏம்பா கோபப்படுறிங்க மாரியப்பன் ரொம்ப நல்லவன்பா அவன் எனக்கு படிக்க நெறயா சொல்லிக்குடுக்றான்பா ஸ்கூல்ல கூட ஓன்னாத்தா உக்காந்துருக்கோம் யாரும் ஒன்னும் சொல்றதில்ல ஒன்னாத்தா சாப்பிடுறோம் விளையாடுறோம் மிஸ் கூட ஒன்னும் சொல்றது இல்ல ஏம்பா நீங்க மட்டும் திட்றிங்க?
என்று கேட்க அதற்கு அவன் அப்பா"அவங்கல்லா கீழ்சாதிப்பசங்கடா நாமஅவங்களுக்கு மேல இருக்கோம் அவங்கல்லா நமக்கு அடிமை மாதிரி அவங்ககூட நாம பொலங்கக்கூடாதுடா", அதற்கு ரமேஷ் "அவங்களும் மனுசங்கதானப்பா" என்று சொல்ல அவன்தந்தைக்கு கோபம் தலைக்கேறி அவனை அடித்துவிட்டார் ரமேஷ் அழுதுகொண்டே போய் படுத்துவிட்டான். அடி வாங்கினாலும் ரமேஷ்க்கு மாரியப்பனின் நட்பை இழக்க மனம் வரவில்லை, ஒருநாள் விடுமுறை அன்று ரமேஷ்ன் அப்பா,அம்மா ஊருக்கு சென்றதால் தன் நண்பன் மாரியப்பனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
ஊரிலிருந்து திரும்பிவந்த ரமேஷ்ன் பெற்றோர்க்கு தன்வீட்டு நாற்காலியில் மாரியப்பன் அமர்ந்து இருப்பதைப் பார்த்ததும் கொதித்துப்போய் விட்டனர்,ரமேஷ்ன் அம்மா " பாவிமவனே கண்டதையெல்லா உள்ள விட்டுட்டு ஏன்டா இப்பிடிப்பன்ற அறிவில்லாத நாயே "என்று வாய்க்கு வநததையெல்லாம் திட்டிவிட்டு "அவனுக்குத்தா அறிவில்ல உனக்காச்சும் தெரியவேனா இங்கெல்லா வரக்கூடாதுன்னு"என்று மாரியப்பனைக் கேட்க அவன் தலை குனிந்தபடி வெளியேசென்றான்.
பின் ரமேஷ்ன் அம்மா மாரியப்பன் அமர்ந்த நாற்காலியை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவி விட்டு வீடு முழுக்க மாட்டுச்சாணத்தால் வழித்து விட்டாள். இதைக்கண்ட ரமேஷ் ஒரு மாட்டுச்சாணத்தளவு கூட மனிதனை மதிக்காத தன் பெற்றோரை நினைத்து நொந்துபோனான். பல வருடங்கள் கடந்த பின்னும் மாரியப்பனும் ரமேஷ்ம் நண்பர்களாகவே இருந்தனர் மாரியப்பன் நன்கு படித்து MBBS,சீட் வாங்கி மருத்துவம் படிக்கச் சென்றுவிட்டான் ரமேஷ் கொஞ்சம் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் பொறியியல் சீட்டுத்தான் கிடைத்தது. ஒருநாள் விடுமுறை அன்று தன் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ரமேஷ்ன் பெற்றோர் ஒரு திருமணத்திற்கு சென்றனர், ரமேஷ் கடையில் அமர்ந்துகொண்டு மளிகை சாமான் வாங்க வருபவர்கள் தரும் பணத்தில் ஏதோ எழுதி எழுதி வைத்துக் கொண்டிருந்தான்,
அவன் அப்பா வந்ததும் கடை வசூல் பணத்தை அவரிடம் தந்தான் அவரும் அதை எண்ணிப் பார்த்துவிட்டு தன் பீரோவில் வைத்து பூட்டி விட்டார். அடுத்த நாள் காலை ரமேஷ் எழுந்ததும் தன் அப்பாவிடம் சென்று" நேற்று நான் கொடுத்த பணத்தை எடுங்கள் "என்றான்" எதுக்குடா" என்று அவர் கேட்க "எடுங்கள் சொல்கிறேன்" என்றான்.அவரும் எடுத்துவந்தார் பின் அந்த பணத்தில் அவன் எழுதியதை ஒவ்வொன்றாகப் படித்தான், " என்னடா கண்டகண்ட பேரெல்லா எழுதிருக்க "என்று அவர் கேட்க அதற்கு ரமேஷ்"நம்ம கடை வசூல்ல எல்லாப்பணமும் கீழ்சாதிக்காரங்ளோடதுதான் அவங்ககூட நாம பொலங்கக்கூடாதுடா னு சொன்னிங்க அவங்க பணத்தை மட்டும் பீரோவில வச்சுக்கலாமாப்பா இவ்லோ நாளா நாம அவங்க காசுலதானப்பா வாழ்ந்துட்டிருக்கோம்னு ரமேஷ் சொன்னதும் அவன் அப்பாக்கு செறுப்பில்அடித்தது போல் ஆனது.அவர் பதிலேதும் சொல்லாமல் அறைக்குச் சென்றுவிட்டார், ஒருநாள் ரமேஷ்ன் அம்மா பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது நிறைய இரத்தம் தேவைப்பட்டதால் மாரியப்பன் வந்து இரத்தம் கொடுத்தான்.இப்போது ரமேஷ்ன் அம்மாவும் உணர்ந்து கொண்டார் தீண்டாமை கூடாதென்று...

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (27-Mar-15, 2:55 pm)
Tanglish : THEENDAMAI
பார்வை : 211

மேலே