இளந்தாரி
இளந்தாரி!!!
அரும்பு மீசை
இதழோடு தடம் பதிக்க
தம்பி தடபுடலாய் வீதி உலா வர
வந்திட்டான் வயசுக்கு இவன் என்று
பெற்றதுகள் பெருமையாய்
நரைத்த மீசை முருக்குதுகள்!!
கையிலொரு தொடு திரை போனும்
இனம் புரியா அகலமுகக் கைக் கடிகாரமும்
பேசுவானோநேரம் பார்ப்பானோ?
ஒரு எலவும் புரியவில்லை!!
இளந்தாரி ஆன இவன்
இளைப்பார நேரமின்றி
வீட்டுக்கொரு காலும்
தெருவுக்கொரு காலுமாகி
கால் பதித்து உலாவுகிறான்!