கூட்டாஞ்சோரு - உதயா
சாதியில்லை பேதமில்லை
சாயங்கால நேரத்திலே
குழம்புலதான் உப்பும்மில்லை
ருசிக்குமட்டும் குறைவேயில்லை
இளவேனி காலத்திலையும்
இளசுயெல்லாம் கூடியிருப்போம்
அரிசி பருப்பு கொண்டுவந்து
கூட்டாஞ்சோரு ஆக்கியிருப்போம்
தென்னைமரத் தோப்புக்குள்ள
திசையெல்லாம் திரிந்திரிப்போம்
கல்லு முள்ளு கொண்டுவந்து
அடுப்பினையும் மூட்டியிருப்போம்
பானையில பாத்து பாத்து
பக்குவமா சோறு குழம்பு வைப்போம்
வாழையிலையை அறுத்துவந்து
பாசத்தோடு பரிமாறி திண்போம்
கொழம்பும்தான் காயவில்லை
சாதமும்தான் வேகவில்லை
அவ பரிமாறின பாசத்துல
எதிலுமேதா குறைவேயில்லை
காக்கா குருவி கூட்டமெல்லாம்
எங்களையேதா பாத்தினுயிருக்கும்
எங்க சமையல கொஞ்சம் திண்ணுபாக்க
கால்கடுக்க காத்தினுயிருக்கும்
ஆண்டவனும் இந்த நேரத்துலதான்
இங்கேதான் வந்துயிருப்பான்
அந்த குருவி கும்பல் கூட்டத்துக்குள்ள
ஒருத்தனாதா மாறியிருப்பான்
நாங்க சேர்ந்திருந்த காலமெல்லாம்
இப்போ நினைவுலதான் துள்ளியெழுது
கோடி கொடியா காசுயிருந்தும்
அந்த இன்பம் மட்டும் இல்லாமயிருக்கு