சிலந்தி வலைகள்
..."" சிலந்தி வலைகள் ""...
மழையும் காற்றும்
எதிரிகள் வாயிலில்லா
பின்னலில் சாரளங்கள்
அச்சில் வார்த்தாற்போல் !!!
அடுக்கடுக்காய் வீடுமிதுதான் !!
வேட்டைக்களமும் இதுதான் !!
நூலினும் மெல்லிய
எச்சிலிழை கொண்டு
தேர்ச்சிபெற்ற நேர்த்தியாய்
கட்டப்பட்ட தொங்கும் !!!
அழகியதொரு தோட்டம்
பின்னிப்பிணைந்த புத்தகம்
அறிவுரைகூறும் அனுபவம்
ஆயிரங்கள் ஒளிந்திருக்கும்
வாழ்க்கையின் தத்துவம் !!!
சொல்லும் சர்க்கரவியுகமது
கட்டவிழ்த்து அதனைவிட்டு
விலகியே வெளியில்வர
சாதாரனருக்கு நிச்சயமாய்
சாத்தியமில்லா சிறையிது
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...