காகிதம்

உணர்வுகளின் நடை மேடை !
எழுத்துக்களின் எழில் மேடை !

ஜனனத்தில் தாஜ் மஹால் !
மரணத்தில் கல்லறை !

கல்விக்கு ஆசிரியர்!
காதலுக்கு கதாநாயகன் !
சட்டத்திற்கு வில்லன் !
நட்பிற்கு நண்பன் !
ஓவியனுக்கு காதலி !

ஆக நான் ஒரு பச்சோந்தி !

கிறுக்குகின்றார்கள் சில கிறுக்கர்கள் ............
படைக்கின்றார்கள் சில படைப்பாளிகள் .....
தீட்டுகின்றார்கள் சில ஓவியர்கள் ......
கசக்குகின்றார்கள் சில கயவர்கள் .....

எந்த உருவத்திலும்
எளிமையாய் நிற்பேன்
எழிலான உருவத்தில் !

வெண்மையான நிறத்தோடு
மென்மையான எண்ணங்களோடு !

என் வாழ்க்கை பயணம் ஒரு
இனிய பயணம் !!!!

===காகிதம் =====

எழுதியவர் : kirupaganesh (30-Mar-15, 9:11 pm)
Tanglish : kaakitham
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே