உனக்காகவே நான்....!

உனக்காகவே நான்.....
உணரவில்லையா நீ இன்னும்
உயிர் உள்ள என் ஜென்மம் முழுதும்
அன்பே உன் நல் வாழ்விற்கு தான்..

நொடிகள் கடந்தாலும்
யுகங்கள் மாறினாலும்
கோள்கள் அழிந்தாலும்
அன்பே என் அன்புக்குரியவன் நீ

ஜென்மங்கள் எல்லாம்
வேண்டும் உன் அருகாமை
வேண்டாம் உன் ஜென்மமின்றி
எனக்கொரு ஜென்மம்

சுவாசிக்க வேண்டும் உன் மூச்சு காற்று
வாழும் காலம் எல்லாம் நான்
தூங்க வேண்டும் உன் மார்பில் சாய்ந்து
என் ஆயுள் எல்லாம் நான்

உனக்காகவே நான்.....
உணரவில்லையா நீ இன்னும்
உயிர் உள்ள என் ஜென்மம் முழுதும்
அன்பே உன் நல் வாழ்விற்கு தான்..

எழுதியவர் : (25-Jun-10, 4:34 pm)
சேர்த்தது : Sherly
பார்வை : 1145

மேலே