நீ காதலிக்க லாயக்கில்லை

நீ காதலிக்க லாயக்கில்லை

நீ கால் பாதிக்கும் தடங்கள்
வழி தவறியதில்லை………..!

நீ சிந்திக்கும் சிந்தனைகளில்
சுயநலமில்லை……….!

நீ செய்திடும் செயல்களில்
வஞ்சகமில்லை……...!

நீ பேசிடும் பேச்சுக்களில்
தற்பெருமைகளில்லை………!

உன் பார்வையில் காமங்கள்
புதைந்ததில்லை………!

நீ அலைபேசியில் அரட்டைகள்
அடித்ததுமில்லை………!

நீ அங்காடிகளில் கடன் அட்டைகளை
தேய்த்ததுமில்லை……….!

நீ கோப்பைகளை கையிலேந்தி
மிதந்ததுமில்லை……….!

நீ அணிந்திடும் ஆடைகளில்
கிழிசல்களில்லை………..!

நீ வேகாத உணவுகளை
உண்டதில்லை………!

உன் காதுகளில் கடுக்கன்
மின்னியதில்லை……….!

உன் கேசங்கள் குத்திட்டு
நின்றதுமில்லை……….!

உன் வாகனத்தின் இரைச்சல்
கூடியதில்லை………!

இவையாவும் உண்மையெனில்
உன்னை காதலிக்கும்
இதயங்கள் இருந்திட
வாய்ப்புகளில்லை........!

நீ காதலிக்க லாயக்கில்லை………!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (31-Mar-15, 6:53 am)
பார்வை : 75

மேலே