இதயத்தில் பொதிந்தவனே

எனை இதயத்தில் பொதிந்தவனே.....
இறுக்க மூடிய உன் இதயக் கோட்டை
திறந்துப் பார்க்க திறவுகோல் தேடினேன்
கண்படும் தூரம் வரை சூனியமே.....
மெல்லிய விரல்களால் வாசலைத் தீண்டினேன்
மௌனம் மட்டுமே விடையானது.....
சன்னக் குரலில் மெல்ல உரைத்தேன்....
என் எண்ணம் தொட்ட
உன் திருநாமத்தை.... .
கண் இமைக்கும் நேரத்தில் கதவுகள் திறந்தன .
கண்டேன் அங்கு
என்னை நானே.........
கவிதாயினி அமுதா பொற்கொடி