என் அன்னைக்கு வாழ்த்து

அன்றொரு நாள்...
உன் குழந்தையாய் பிறந்தேன்.

என்னை குருடனாக்காமல் காத்தது
உந்தன் முகம்..

என்னை செவிடனாக்காமல் காத்தது
உந்தன் குரல்..

நான் மார் கடித்தும்
மகிழ்ந்தாய்..
மலரின் மடியில்
என்னை வைத்தென்றும்
துயின்றாய்..

என் பாரம் சுமந்தே
உன் பாதம் தேய்த்தாய்..

கண்ணோரம் நெருங்கி
தினம் காதல் வார்த்தாய்..

பட்டினியை நான் மறக்க வெறும்
சட்டினியில் மட்டுமே பலநாள்
உன் பசி தீர்த்தாய்..

உண்மையின் உருவமான நீ
பொய்களும் எனக்காக சில
ஊற்றினாய் தந்தையின் முன்பு..

உயிரோட்டும் திரவமான நீ
என்றுமே திகட்டாத ஒன்றை
ஊட்டினாய் அது உன் அன்பு..

எனக்கான என் உறவே
உனக்கான என் வரிகள்
இதில் குறைவுதான்..

என் குறையெல்லாம்
இப்பூமியில் உனக்கு
மட்டும்தான் நிறைவு..

நான் மட்டும் உனக்கு
குழந்தை இல்லை நீயும் ஓர்
குழந்தைதான் இன்றெனக்கு..

"என் அன்னைக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்"....[April 1]


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (1-Apr-15, 12:04 am)
Tanglish : en annaikku vaazthu
பார்வை : 255

மேலே