அம்மா என் தெய்வம்
முகம்அது கனிய யாரும்
------ முகழ்ந்திடு பேச்சோ என்னில்
அகத்தினைக் குளிரச் செய்யும்
------- அமுதமே ஒக்கும் ; உந்தன்
மிகப்பொழி அன்பில் ஊறி
------ மூழ்கினேன் ' பிரிவுத் துன்பில் '
தகவிதோ உமக்கு ? நீயும்
------ தந்திடல் ஆற்றேன் அம்மா !
அன்பினால் ஆசி செய்தாய் .
------ அருஞ்சுவை உணவுத் தந்தாய் .
மனதினில் தங்க வைத்து
------ மட்டிலா அன்பு தந்தாய் .
நினைவினை விட்டு நீங்கா
------- நெடுது நாட்கள் வாழ்ந்திட
உனதருள் கிட்டிட யானும்
------- உனையே வேண்டு கின்றேன் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
