காலை வசந்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீல வானம் தன் வெண்மை
பஞ்சு மேக படுக்கையை
விரிக்க
காலைக் கதிரோன்
ஒளிக் கற்றைகளை
வீசிய படி
விண் உலகத்தையும்
மண் உலகத்தையும்
விழித்து பார்க்க
பறவைகள் சோம்பல்
முறித்த படி வானத்தில்
வட்ட மிட்டு சிறகுகளை
அடித்து வலம் வர
மலர்களிலும் புல்
நுனிகளிலும் உள்ள
பனித்துளிகள் விடு தலை
பெற்று சூரியனின் பாதங்களை
பணிந்து வசந்தை
வரவேற்கின்றது