நட்புமட்டுமே 1 நீட்சி

நட்புமட்டுமே. .
நீ ஏழையானாலும் கூடவரும்
பணங்கேட்டாலும் தேடித்தரும்
அழும்போதும் அருகிலிருக்கும்
எழும்போது கைகொடுக்கும்
குறைமறந்து நிறைகாணும்
தன்னறைகொடுத்து உனைப்பேணும்
தெருவில் நின்றாலும்..
அருகில் நிற்கும்
உயிரைக் கேட்டாலும்..
பாதி தரும்
நிறம் பார்க்காது..
மனம் பார்க்கும்
பணம் பார்க்காது..
குணம் பார்க்கும்
வலிகண்டால் ஆற்றிவிட்டு..
பசிகண்டால் போக்கிவிட்டு..
நமக்காய்த் துடிக்கும் மறுஇதயம்
தாய்மைக்கு அடுத்ததாய் நட்புதானே

எழுதியவர் : moorthi (3-Apr-15, 12:16 pm)
பார்வை : 167

மேலே