இதயம் இல்லா இதயம்

நிஜமான உண்மைகளை
இதயம் நம்ப மறுக்கும்
கனமான நடப்புகளை
மறக்க முடியாத
சமயத்தில்
இறைவனிடம் கேட்கின்றேன்
ஏன் படைத்தாய்
மனிதனுக்கு இந்த இதயத்தை?

நினைக்க நினைக்க இனிக்கும்
இனிய நடப்புகளை
எண்ணி எண்ணி மகிழ ஈரிதயம்
போதவில்லை
கேட்கின்றேன் இறைவனிடம்
ஏன் இத்துணைச் சிறிய
இதயத்தைத் தந்துள்ளாய்?

எழுதியவர் : தமிழ்ச்செல்வி த/பெ கோவிந் (6-Apr-15, 11:26 am)
பார்வை : 52

மேலே