தமிழகத்தில் யார் தான் மாற்று யாருமே இல்லையோ

தமிழகத்தில் யார் தான் மாற்று...? யாருமே இல்லையோ..?
உதகையில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக, மற்றும் அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பா.ம.க விளங்கும்.
திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதிமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேமுதிக செயல்படாத எதிர்க்கட்சியாக உள்ளது.
சரி....இருக்கட்டும் இவைகள்...
தமிழகத்தில் மாற்று சக்தியே நாங்க தான்.... 234 தொகுதியிலும் தனித்தே போட்டி என்று சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது....?
தேசியக் கட்சியான பாஜக வும் நாங்கள் தான் மாற்று என்று கூறியுள்ளார்கள்.....
ஆக....தற்பொழுதே குழப்ப ஆரம்பித்து விட்டார்கள் இந்த மேற்கண்ட அரசியல் கட்சிகள் எனலாமா...?
- சங்கிலிக்கருப்பு -