மலர்கள் கேட்டேன்

சமீபத்தில் வெளியான "ஒ காதல் கண்மணி" படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ராகம் ரஹ்மானிடம் இருந்து
அதில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த ஒரு பாடல் "மலர்கள் கேட்டேன் "..இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு இனம் புரியாத உணர்வு தொற்றிக்கொள்கிறது காரணம் அதன் வரிகளோடு இயைந்த இசை தான் ..

வைரமுத்து எப்பொழுதுமே ஏதோ ஒரு புதுமையை வரிகளில் புகுத்துவார் .உதாரணமாக சங்க இலக்கியங்களில் வரும் நறுமுகையே நறுமுகையே இலக்கணத்தில் வரும் சல சல இரட்டை கிழவி போன்றவற்றை பயன்படுத்துவார் ..

இந்த பாடலை தெய்வீகமாகவும் எடுத்து கொள்ளலாம் காதலாகவும் எடுத்து கொள்ளலாம் .இந்த பாடலை அருமையாக பாடி இருக்கிறார் சித்ரா அவர்கள் ..இசை புயலிடம் இருந்து மெல்லிசை அதுவும் தமிழிசை எடுப்பது யார் நம் மணிரத்னம் அல்லவா..

இந்த படத்தில் வரும் :மலர்கள் கேட்டேன்" என்ற பாடலில் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார்
தந்தனை சேர்த்தனை போன்ற வார்த்தைகளை கையாண்டுள்ளார் .. இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு தமிழ் இப்படியாக சேர்ந்தால் நன்மையே ..நேரம் இருந்தால் கேட்டுபாருங்கள் ..உங்களுக்கும் பிடித்துபோகும் ...

இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்த்தனை.
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்த்தனை..
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய் ..!!!

எழுதியவர் : அருண்வாலி (6-Apr-15, 10:23 pm)
Tanglish : malarkal KETTEN
பார்வை : 329

மேலே