உன் நினைவுகள்

உன் நினைவுகள்

ஆம் நானும் மறந்து விட்டேன் உன்னை
என்று சொல்ல நான்
இதயமில்லாதவள் இல்லை

எப்படி மறப்பேன் நான்
உன்னோடு புன்னகை பூத்த நாட்கள்
அழகான காதல் பரிசுகள்

உன்னை உயிராக நான் மெய்யாகி
எழுதிய நாட்குறிப்பின் வரிகள்
இதயக் கல்வெட்டுகள்

அலை கடல் உன்னோடு எனை நனைத்து கொஞ்சல் மொழிகள் பேச என்னுள்
வெட்க சிணுங்கல்கள்

காதலை நான் ரசித்திருக்க
நீயோ எனை வெறுத்திருக்க

மறந்து விடு என்றாய்
என்னை விட்டகன்றாய்

தேம்பியழுத காலம் போய்
தேவதையாய் வலம் வர
தொடங்கிவிட்டேன்
புது வாழ்வு வாழ பழகி விட்டேன்

இனி தேவையற்றவையாய் உன் நினைவுகள் மட்டும்

எழுதியவர் : ஷாமினி குமார் (6-Apr-15, 10:23 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 743

மேலே