பகுத்தறிந்திடுவோம்

பகுத்தறிந்திடுவோம்.....!

ஆதியில் உயிர்கள்.....
இவ் -
அவனியில் தோன்ற...
வான் -
தரு முகில் நீர்ரே....
மூலாதாரம்...! எனில்.

பரந்து விரிந்த -
சமுத்திர அலையில்
துள்ளிக் குதிக்கும்
மீன்னே...
மச்ச அவதாரம் .....!
ஒன்றாம்......

முந்நீர் விடுத்து
மண் வளம் நோக்கி ...
ஆமை நடக்க....
ஆனதே -
கூர்ம அவதாரம்..!
இரண்டாம்....

நிலத்திடை -
நீள் பசி போக்க....
புல் கிழங்கினை
புசித்த பன்றி...
வராக அவதாரம்....!
மூன்றாம்....

'ஊன்'னுடல் -
உதிரம் குடித்து ....
நரமாமிசமும் தேடி....
கதி கலங்கிட....
கர்ஜனை செய்த
மனித விலங்காய்....
நரசிம்ம அவதாரம்...!
நான்காம்...

வானுயர் -
ஆணவமழித்திட...
அடியொரு மூன்றால்
உலகெலாமளந்த...
வாமன அவதாரம்...!
ஐந்தாம்....

பல்கலை -
பயின்றும்...
பயிற்றுவித்தும்
பகலவன் போன்ற
பரசுராம அவதாரம்...!
ஆறாம்....

ஒருவில்....
ஒருசொல்....
ஒருஇல்...
வாழ்வென...
இராம அவதாரம்...!
ஏழாம்.....

மழுவினை ஏந்தி....
வழுவின்றி வாழ....
உழுதிட்டு மகிழ...
பலராம அவதாரம்...!
எட்டாம்....

வேய்குழல் நெய்த...
கீதையை தந்த...
கிருஷ்ண அவதாரம்...!
ஒன்பதாம்...எனினும்

குதிரை -
திறன் கொண்ட
ஏவுகனையால்....
கூர்முனை ஆயுத
குண்டு துளைக்க...
கொன்று குவிக்க...
'கணினி ரோபோ'
கல்கி அவதாரம்.....!
பத்தாய் நிறையும்...

திரு மால் வடிவில்....
இரு ஐந்து அவதாரம்
காட்டும்.....
பரினாம வளர்ச்சியை...
பகுத்தறிந்திடுவோம்..!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (6-Apr-15, 10:31 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 123

மேலே