அன்புள்ள அப்பாவுக்கு
அன்புள்ள அப்பாவுக்கு ,,,,
எங்கே இருக்கீறர்கள் ?
சொர்கத்திலா ? நரகத்திலா ?
அல்லது வேறேதேனும் உலகத்திலா?
நலமாக இருக்கீறர்களா ?
இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..,,
ஒரு சுபயோகசுபதின்த்தில் எங்களை
விட்டு பிரிந்தவிட்டீர்கள்
எமன்தான் அழைத்துக்கொண்டான் என
எல்லோரும் சொன்னார்கள்
ஆனால் எமனை நீங்கள்தான் விரும்பி
அழைத்தீர்கள் என்பதே உண்மையாக
இருக்க முடியும் அப்பா
தோழனாகவும் இல்லை,
துயரத்தின் போது தோள்கொடுக்கவும் இல்லை,
அன்பைக் கூட ஆக்ரோஷமாகத்தான் காட்டினீர்கள்
ஏன் அப்பா ?
என் மூலமாக வந்தவன்தான் நீ
என்னால் வந்தவனில்லை நீ என்பதாலோ
இருந்தும் வருந்துகிறேன் அப்பா
உங்கள் பிரிவால் ..,,
நீங்ககள் விட்டுச்சென்ற வெற்றிடங்களை நிரப்பவே கலர்கலராய் விரிந்திருந்த என் கணவுகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் அப்பா ..,,
இந்தப் போரட்டத்தில் சிலரது பிரிவுகளை
சந்தித்துவிட்டேன் அப்பா
இருந்தும் தளரவில்லை அப்பா
பிரிவே நிரந்தரம் என்பதை சிறுவயதிலேயே
உபதேசித்துவிட்டீர்கள் ,வாழ்ந்தும் காட்டினீர்கள்
அதற்காக நன்றி உரைக்கிறேன் அப்பா ..
அம்மாவின் ஆசையாக ஒரு வீடும் ,
உங்கள் அன்புமகளுக்கு கல்யாணமும்
விரைவில் நடக்க இருக்கிறது அப்பா
அழைப்பிதழ் அனுப்புகிறேன்
ஆசிர்வதியுங்கள் !!
இனி
ஏதேனும் கடமை மிச்சம் இருக்கிறதா ?
சொல்லி அனுப்புங்கள் அப்பா
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்
அன்புடன்
நவீன் சுப்பிரமணியம்