நினைவுகளே நினைவுகளே

அன்பு நிறைந்த இல்லம் பிரிந்து ,
அண்ணாமலைப் பல்கலைகழகம் வந்து ,

அறிவுத் தேனுடன் நாளும்,
அனுபவத் தேன் பருகினீர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பதினாறு அகவையில் இங்கு,
பதித்தீர்கள் பாதம் :

ஒரு நான்கு ஆண்டுகளாய்,
உல்லாசமாய்த் திரிந்தீர்கள் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வண்ணச் சிறகுகளால் ,
வானமெங்கும் அளந்தீர்கள் :

வீட்டுக் கல்வி போதாதென்று ,
விடுதிக் கல்வி பயின்றீர்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கூட்டுக் குடும்பமாய் ,
கல்வி பயின்ற நீவீர் இன்று ,
எங்கெங்கோ பறக்கின்றீர் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எந்த ஊர் எந்த திசை ,
எதுவும் தெரியாது என்றாலும் ,

செந்தமிழால் அன்பு பேசி ,
சீர்மையுடன் பழகினீர்கள் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செந்தமிழ் நினைவு என் ,
சிந்தனையில் உள்ளவரை ,
இப் பல்கலைக்கழகத்தை மறவேன்!!!

எழுதியவர் : சித்ரா ரமணன் (7-Apr-15, 11:21 am)
சேர்த்தது : சித்ரா ரமணன்
பார்வை : 239

மேலே