மாறுகிறோம் ………………
சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை
நாம் எங்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் என்று
நாத்துகள் எல்லாம் கான்கீரீட் கம்பிகளாக மாறுவதும்
சேறு எல்லாம் சிமெண்ட்டாக மாறுவதும்
வரப்புகள் எல்லாம் மதில் சுவராக மாறுவதும்
கால்வாய் எல்லாம் நீச்சல் குளமாக மாறுவதும்
நெற்க்களம் எல்லாம் அடுக்குமாடியாக மாறுவது
சட்டென்று மாறுகிறதா இல்லை நம்மால் மாற்றப்படுகிறதா…….…..!
வானத்தை நிரப்புவது என் மாதிரி விவசாயியின்
பிணங்களைக் கொண்டுதானோ
கல்வி என் மகனின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தும் என்றுதானே படிக்க வைத்தேன்
கல்வி என் வம்சத்தையே
கடனாளியாக ஆக்கிவிட்டதே
காலத்துக்கு ஏற்றார் போல் என்னும்
வாழ்வியலை இன்னும் அறிதயாதவனானேனோ…….…..!
வசதியாக வாழாவிட்டாலும் கடனாளியாக
வாழாதே என்ற சொற்களெல்லாம் பொய்யாய் போனதே இன்று
அடிமைகளாகவே வாழ்கிறோமே தினம் தினம்
சிந்திய வியர்வைத்துளியை நெல்மணியை உருவாக்கினோமே
சிந்தப்போகும் வேர்வையும் கடனாளியாகவே சிந்துமே
சற்றும் சிந்திக்கவில்லை; சிந்திப்பதும் என்னதாகவே இல்லையே
சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை
இதுதான் என் கடைசி மடல் என்று …