வெள்ளம்

தென்னம் பாளை தின்னுது துள்ளும் வாளை
மின்னும் பூவை அள்ளுது செத்த காளை
மிதக்குது துகில்கள் அணைக்குது பிணங்கள்
திகைக்குது விழிகள் உதைக்குது இமைகள்
பதைக்குது நெஞ்சம் சிதையுது தஞ்சம் - இயற்கை
விதைத்ததோ வஞ்சம் கதைப்பதோ மிஞ்சும்
பாடி ஆடும் கள்ள வெள்ளம்
கோடி சூடும் கொள்ளை அழகு

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Apr-15, 8:09 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : vellam
பார்வை : 121

மேலே