தடுப்பு

சிதறும் மழை துளிகளை அள்ளி
தோழமைகள் மேல் தெளித்து
விளையாட ஆசை...

சாலைகளின் மழைக்கால தோழன்
தேங்கிய குட்டைகளை நொண்டி
தாண்டிட ஆசை...

முன்னொருநாள் நண்பனை மெல்லமாய்
பின் சென்று கண்பொத்தி
கண்டுபிடிக்க சொல்ல ஆசை...

சின்னச் சின்னச் சேட்டைச் செய்து
சிறு வயதைப் போல் அம்மாவிடம்
குட்டு வாங்க ஆசை...

தடுக்கிறது என் இளமை முறுக்கும்
பொறியாளன் பட்டமும்,
நாகரீக சமூகமும்...

எழுதியவர் : இளையநிலா (7-Apr-15, 10:15 pm)
சேர்த்தது : பிரபு ராஜா மு
Tanglish : thaduppu
பார்வை : 59

மேலே