கலியுகம் - 12016

நாய்கள் ஜாக்கிரதை
இது ஆசிரம போர்டு....!!

காதலர்கள் ஜாக்கிரதை
இது சில்ட்ரன்ஸ் பார்க்கு...!!

நான்கு சுவர்களுக்குள்
நாகரீகமாய் மிருகங்கள்

கூசி விழி மூட
குதூகலிக்கும் மனிதர்கள்...!!

நாகரீக முதிர்ச்சி
அநாகரீகமாய் ஆச்சி

நல்லதை சொன்னவன் கதி
நாராசமாய் போச்சி.......!!

இருண்டவன் கண்ணுக்கு
எடுத்ததெல்லாம் பேயோ ?!!

கிள்ளிப் பார்க்கிறேன் என்
கிட்டத்தில் இருந்தவனை.....

சில்லித் தனமாய் செல்லில்
சிரித்த பொணம் போல அவன்....

என்ன நடக்குதுன்னு
எவனுக்குமே கவலையில்லை....

எழுந்து துயிலும்வரை
ஏகாந்த இன்ப நிலை......!!

காசு இருக்கும்வரை
களிப்புக்கு பஞ்சமில்லை....

கண்கள் திறக்கும் வரை
கடவுளும் தெரிவதில்லை....!!

எழுதியவர் : ஹரி (8-Apr-15, 1:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே